பயங்கரவாதம்

இஸ்லாமிற்கான உண்மையான நேர்வினை அமைதி மற்றும் கருணையாகும். எல்லாம் வல்ல இறைவன் கூறுகின்றான்: “… ஓஹ் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாம் தீனுல் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;….”

இஸ்லாம் என்ற போர்வையில் பயங்கர வாதத்தில் பங்கு கொள்ளும் மக்கள் முஸ்லிம்கள் அல்ல. அப்பாவி மக்களை கொன்று அவர்களுடைய சொத்தை அழிப்பதை இஸ்லாம் ஒரு காலும் ஆதரிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் நேர் வழியிலிருந்து முழுவதுமாக விலகிச் சென்றவர்கள் மற்றும் அவர்கள் நரகத்தில் நித்தியமாக வசிப்பர்.

உண்மையாதெனில், பயங்கரவாதத்தை இஸ்லாம் என்றைக்கும் அங்கீகரித்ததேயில்லை. சில ஊடகங்கள் முஸ்லிம் பெயருடன் போராடும் ஒருவரை, அவர் எந்த காரணத்திற்காக போராடினாலும் சரியே, அவரை பயங்கரவாதி என சித்தரிக்கின்றன.

இதைப் பற்றி புனித குர்’ஆன் மற்றும் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியிருப்பதென்ன என்பதை ஆழமாக விவாதிப்போம். தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எச்சரித்ததில் கொலைதான் பாவங்களில் முன்னணியில் இருக்கிறது.

இதுதான் தீர்ப்பு நாளன்று ஒவ்வொருவரிடமும் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் முதல் வழக்காகும்.

போர்களத்திலும் பயம் நிறைந்த அப்பாவி போராளியை ஒரு இலக்கிற்குள் ஆக்குவது அனுமதிக்கப்படவில்லை. மேலும் இது ஒரு வெறுக்கத்தக்க இஸ்லாமில் தடை செய்யப்பட்ட செயலாகும்.

போரிடும் பொழுது அவசியமில்லாமல், மரங்களை வெட்டுவதும், பிராணிகளுக்கு தீங்கு விளைவிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயங்கரவாதத்தையும் முறைமை நிலையையும் இஸ்லாம் வேறுபடுத்துகிறது.

“….நிச்சயமாக எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்…” அல்–குர்’ஆன் 5:32

சில மேற்கோள்கள்

தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு முறை கூறினார்: {ஒரு பூனையை அது மரணிக்கும் வரையில் கட்டி வைத்திருந்த ஒரு பெண் தண்டிக்கப்பட்டாள். அதற்காக அவளுக்கு நரகம் விதிக்கப்பட்டது. அதை அவள் கட்டி வைத்த பொழுது, பூனைக்கு அவள் உண்ணவும் குடிக்கவும் ஒன்றும் கொடுக்கவில்லை, மேலும் பூமியிலுள்ள புழுக்களை உண்ணவும் அதை சுதந்திரமாக விடவில்லை. }

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின்படி கீழே குறிப்பிட்ட செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன,

  • அப்பாவி மக்களின் மனதில் பயங்கரவாதத்ண்டுவது
  • அவசியமின்றி சொத்துக்களுக்கும் கட்டிடங்களுக்கும் சேதம் உண்டாக்குவது
  • குண்டு வைத்து தகர்ப்பது, பொது மக்களை காயப்படுத்துவது

முஸ்லிம்கள் அமைதி, அன்பு மற்றும் மன்னிப்பு கடைபிடித்து வன்முறை செயலான விஷயங்களில் ஈடுபடுவதில்லை. ஒரு தனிப்பட்ட முஸ்லிம் யாரேனும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அவர் மீதுதான் இஸ்லாமிய சட்ட திட்டங்களை மீறிய குற்றமாகும்.