இஸ்லாமில் பலதார மணம்
வேண்டுமென்றே முஸ்லிம்கள் ஒன்றை விட அதிகமாக மணம் புரிந்து கொள்ளலாம் என்று கூறி இந்த தலைப்பில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. உண்மையில், அல்-குர்’ஆன் இதைப் பற்றி கூறுவதென்ன என்பதை ஸுராஹ் நிஸா, அத்தியாயம் 4, வசனம் 3ல் உள்ளது :
“…..உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),…”
நீங்கள் அனைத்து மனைவியர்களுக்கிடையே நியாமமாக நடக்க முடியும் என்றால் மட்டும் அனுமதியுண்டு. அதாவது மறைமுகமாக, இஸ்லாம் மக்களை பல தார மணம் புரிவதை ஊக்குவிக்கவில்லை. உதாரணத்திற்கு ஒரு ஆண் இளம் வயதிலேயே இறந்து விட்டு, அவருடைய மனைவியருக்கிடையில் பங்குபோட அவரிடம் போதுமான சொத்தும் இருந்தால், அவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கலாம், இதனால் நியாயம் நிலை நாட்டப்படுகிறது. அதற்கு நேர்மாறான விஷயத்தில் இஸ்லாம் ஒன்றை விட அதிகமாக மணப்பதை ஆதரிக்க வில்லை.
மேலும், ஒன்றை விட அதிக பெண்களை மணப்பது ஒன்றும் இஸ்லாம் மதத்தில் ஒரு நிபந்தனையோ கட்டாயமோ கிடையாது, இதுதான் அநேக நேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விஷயம். பதிலாக இது ஒரு விருப்பத் தேர்வாகத்தான் உள்ளது.
ஒன்றைவிட அதிகமாக பெண்களை மணப்பதைப் பற்றி அல்-குர்’ஆன் என்ன சொல்கிறது என்பதை பார்த்தோம், இப்போது இந்த சூழ்நிலையில் தர்க்க ரீதியான நியாயத்தை பார்ப்போம்.
இயற்கையாகவும் போர், விபத்துக்கள் (கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுதல்), மதுபான குடிப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை சேர்த்து இன்னும் பல காரணங்களால் இளமை வயதிலேயே மரணத்தை சந்திப்பவர்கள் ஆண்களே அதிகம். பண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் பொழுது ஆண்களைல் குறைவான எண்ணிக்கையை சரி கட்ட அவர்கள் சரிசமமாக நடத்தப்படவிருந்தால் மட்டும் ஒன்றை விட அதிக பெண்களை மணக்க பரிந்துரைக்கப்படுகிறது.
பலதார மணம் (பல பெண்களை மணப்பது) பின் வரும் சூழ்நிலைகளைல் அனுமதிக்கப்பட்டது :
- மனைவி இறந்துவிட்டால் / நோயாளியாகி இருந்து கணவனுக்கு சேவை செய்ய இயலாமல் இருக்கும் பொழுது ஒருவரி அவர் விருப்பப்படி வேறு பெண்களை மணக்கலாம்.
- ஒரு பெண் மலடாக இருந்து, கணவனுக்கு பிள்ளை வேண்டும் என எண்ணினால், அவருடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய வேறு பெண்ணை மணக்கலாம்.
- ஒரு பெண் விதவையாகி, அவளுடைய குழந்தைகளை கவனிக்க போராடிக்கொண்டிருக்கும் பொழுது, சமுதாயத்தில் தகுதியான ஆண்கள் அவளை மணக்கலாம்
இஸ்லாம் ஆதரிக்காத ஒரு காரணம் என்னவென்றால், ஒருவர், தன் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள பல பெண்களை மணப்பது. அந்த எண்ணத்துடன் மணப்பவர்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டு, தீர்ப்பு நாளன்று நிச்சயமாக தண்டிக்கப்படுவர்.