அல்-குர்’ஆன், இஸ்லாமின் புனித புத்தகம்

பல்வேறு சமுதாயங்களின் புகழ் பெற்ற அறிஞர்களால் எழுதி உருவாக்கப்பட்ட விசித்திரமான, நம்ப முடியாத, அபூர்வமான மற்றும் எண்ணற்ற இலக்கியங்கள் இன்றைய நாள் வரை உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் பொதுவானதாக இருக்கும் விஷயம் என்னவென்றால் அவைகளுடைய ஆசிரியர்கள் மனிதர்களாகவே இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இஸ்லாமின் புனித வேதமானது சர்வ வல்லமை படைத்தவனால் இறக்கியருளப்பட்டது.

பல்வேறு சமுதாயங்களின் புகழ் பெற்ற அறிஞர்களால் எழுதி உருவாக்கப்பட்ட விசித்திரமான, நம்ப முடியாத, அபூர்வமான மற்றும் எண்ணற்ற இலக்கியங்கள் இன்றைய நாள் வரை உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் பொதுவானதாக இருக்கும் விஷயம் என்னவென்றால் அவைகளுடைய ஆசிரியர்கள் மனிதர்களாகவே இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இஸ்லாமின் புனித வேதமானது சர்வ வல்லமை படைத்தவனால் இறக்கியருளப்பட்டது.

அல்-குர்’ஆன் இறைவனின் வார்த்தைகள் கொண்ட ஒரு புத்தகம் என்பதனை இந்த வசனம் விளக்குகிறது:

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சும், [அவர் தடைசெய்த எல்லா வகையான பாவங்களிலிருந்தும் தீய செயல்களிலிருந்தும் விலகும், மேலும் அல்லாஹ்வை மிகவும் நேசிக்கும் (அவன் விதித்த அனைத்து வகையான நற்செயல்களையும் செய்யும்]) நீதிமான்களுக்கு (இது) ஒரு நேர்வழிகாட்டியாகும். மூலம் : அல்-குர்’ஆன், ஸுரஹ் ஆல்-பகரா, வசனம் 2

அல்-குர்’ஆன், பூமியில் இறக்கப்பட்டதற்கான காரணம்

இறைவனுடைய ஒரே ஒரு புத்தகமாக இருப்பதினால், அது இறக்கியருளப்பட்டதிலிருந்து எந்த வித மாற்றத்திற்கும் உட்படாத துல்லியமான வசனங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் அவை இஸ்லாம் வேகமாக வளர்ந்து வந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டவையாகும்.

மனித இனத்தின் மற்றும் சமுதாயத்தின் நலனைப் பேணுவதற்காக கவனம் செலுத்துகிற நடைமுறைக் கட்டளைகள் ஆன்மீகச் செய்தியுடன் இருப்பதினால் திருக்குர்’ஆனின் தரம் தெளிவாகிறது. இது தான் திருக்குர்’ஆனை புனிதமாக மதிக்கப்படும் மற்ற உலக புத்தகங்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது. இதுவே திருக்குர்’ஆன் திருவருளப்படுவதற்கான முழு நோக்கமுமாகும்.

பொருளாதாரம், வர்த்தகம், பாலின சமத்துவம், திருமணம் மற்றும் விவாகரத்து, மரபுரிமை, மக்கட் பேரு மற்றும் குழந்தை பராமரிப்பு உட்பட .மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை எதுவாக இருப்பினும், இஸ்லாமின் புனித வேதம் அதற்கு வழிகாட்டுகிறது. இவைகளை கடைபிடித்து வாழ்வைத் திருத்திக்கொள்வோர் திருக் குர்’ஆனை ஓதுவதும் அதனைப் புரிந்து கொள்வதும் மூலம் உலக வாழ்வில் மன அமைதியையும் மரணத்தின் பின்னர் நித்திய நிம்மதியையும் அடைகின்றனர்.

திருக்குர்’ஆன் ஏன் மனித இனத்திற்கு இறக்கியருளப்பட்டதென்று இந்த வசனம் விளக்குகிறது:

“இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.” மூலம்: ஸூரா யூனுஸ் – வசனம் 37

குர்’ஆனின் அழகு என்னவென்றால், அது எந்த உயிரினத்தையும் விமர்சிக்கவோ அதனை துஷ்பிரயோகமோ செய்வதில்லை, மாறாக அது ஆத்மாவின் சாந்திக்காக நற்காரியங்களாலும் நற்செயல்களாலும் அதை பலப்படுத்தி மன அமைதிக்காக வழி வகுக்கிறது. மொத்தத்தில் பூகோள மத நல்லிணக்க நடவடிக்கையை பேணி பாதுகாப்பதற்குத் தேவையான யதார்த்தமான இயல்பை இஸ்லாம் தன்னிடத்தே கொண்டுள்ளதை அறிந்து கொள்ள திருக் குர்’ஆன் இறக்கியருளப்பட்டுள்ளது.

நலனுக்காக திருக் குர்’ஆனை ஓதுவது

அடுத்ததாக, விவாதமின்றி போதனைகளின் களஞ்சியம் மற்றும் அல்லாஹ்வினால் குறிப்பிட்டது போல ஆராய்ந்து நல்வழி நல்குவதற்காக உண்டான அறிவாற்றலில் கடலாக விளங்கும் புனித வேதத்தைத் தவிர அல்-குர்’ஆன் வேறொன்றுமில்லை.

“இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். மூலம்: (ஆல்-குர்’ஆன் : 2:2)

நற்காரியங்களால் நமது மனங்களை நிரப்ப நமது நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதவது : “குர்’ஆனின் ஒரு பகுதியையாவது தனக்குள் கொண்டிராதவன் பாழடைந்த வீட்டினைப் போலாவான்.” (திர்மீஸியில் அறிவிக்கப்பட்டது) : மூலம்.

தொடர்ந்து திருக் குர்’ஆனை ஓதுவது உடலின் வியாதிகளை குணமாக்கும். மேற்கொண்டு, அதனால் கருணை நம்மை போர்த்திக் கொள்ளும். “இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும்

உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்….” மூலம் : ஸூரா அல்-இஸ்ரா – 17:82

அமைதி, சாந்தி மற்றும் சமாதானம் அடையவேண்டி திருக் குர்-ஆனில் கூறப்பட்டிருப்பதாவது : “மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!” மூலம்: ஸூரா ர’ஆத் – 13:28

  • மழைப்பொழிவு பூமியில் எவ்வாறு வசந்தத்தை தருகின்றதோ அவ்வாறே இஸ்லாமின் புனித புத்தகத்தை ஓதினால் மனதின் பதட்டம் மற்றும் கவலைகள் களைக்கப்பட்டு, இதயங்கள் உயிர்பிக்கப்படுகின்றன்.

பல பிர்ச்சினைகளின் சரியான தீர்வுக்கு வழிகாட்ட முடியும். இதைப்பற்றி குறிப்பட்டுள்ளதாவது: “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.:  மூலம் : ஸூர பக்ரா 2:2

  • மக்களிடையே சிறந்தவர்களாக விளங்க.

திருக் குர்’ஆன், கடைசியாக திருவருளப்பட்ட இறைவனுடைய புத்தகமாக இருந்து அது உண்மையான மனித நடத்தை மற்றும் நியாயமான பொருளாதார அமைப்பு உள்ளிட்ட சமூகத்தில் ஒரு விஷயத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக கையாள்வது என்பதை குறித்து ஒவ்வொரு மனிதனுக்கும் மிக உயர்ந்த ஆதாரமாக விளங்குகிறது.

இஸ்லாமின் புனித வேதம் – ஆல்-குர்’ஆனின் ஒரு இலவச பிரதியை பெற்றுக்கொள்ளவும் !!

திருக் குர்’ஆன் ஓதுவது உங்களுக்கு அதன் மூலாதாரங்களிலிருந்து யதார்த்தமான விஷயங்கள் கிடைக்கப்பட்டு இன்றைய நாள் வரை உங்களுக்கு ஊட்டப்பட்ட தவறான கருத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ளச் செய்கிறது. ஓர் சமுதாயத்தை பற்றி தெரிந்துகொள்ளும் முன் அதன் அடிப்படை பற்றி முதலில் தெரிந்து கொள்வதே சாலச்சிறந்தது

திருக் குர்’ஆனை உங்கள் சொந்த மொழியில் வாசியுங்கள். இதனால் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்த   மற்றும்  இது வரை அறியாத பல ஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

திருக் குர்’ஆன் அதன் சொந்த அரபிக் மொழியில் திருவருளப்பட்டிருந்தாலும் அதை நீங்கள் உங்கள் சொந்த மொழியில் வாசிக்கலாம்.  ஒரு இலவச பிரதிக்கு முந்துங்கள், வாசித்து மனித குலத்திற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.