இதர கேள்விகள்

இஸ்லாம் & முஸ்லிம் – இந்த இரண்டு வார்த்தைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுவது எவ்வாறு?

உலகிலுள்ள மற்ற மதங்களைப் போலவே, இஸ்லாமும் ஒரு மதத்தை, ஒரு வழிபாட்டை குறிக்கிறது. இஸ்லாம் என்ற வார்த்தை “இறைவனுக்கு அடிபணிதல்” அல்லது சாதாரணமாக “சாந்தி” என்ற அர்த்தம் கொண்டுள்ளது. இந்த இரண்டு வார்த்தைகளும் ஒருங்கிணைந்து “இறைவனின் வார்த்தைகளை பின்பற்றி சாந்தியடைவது” என்ற முடிவை உருவாக்குகின்றன.

முஸ்லிம் என்பவர், இஸ்லாம்–ஐ பின்பற்றுபவர், மற்ற வார்த்தைகளில் “இறைவனுடைய கூற்றுக்களைப் பின்பற்றி சாந்தமான நிலையிலிருக்கும் ஒருவர்தான் முஸ்லிம் என்பவராவார்.”

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்


சமுதாயத்திற்கு இஸ்லாம் என்ன கற்பிக்கிறது?

தான் வாழ்ந்து வரும் சமுதாயத்தில் தன்னுடைய நன்னெறித் தன்மைகளை அறுவடை செய்வதிலேதான் இஸ்லாமின் முழு கவனமும் செலுத்தப்படுகிறது. இஸ்லாம் ஊக்குவிக்கும் சில யதார்த்தமான பண்புகளில் பின்வருபவையும் அடங்கியுள்ளன:

 • ஒவ்வொரு உயிரினத்தையும் மதிப்பது
 • பாக்கியம் குறைந்திருப்போரை பெருமளவில் கவனிப்பது
 • அறிவு நாடுவதை நிறுத்தாமலிருப்பது
 • ஒவ்வொரு செயலிலும் நேர்மை, நாணயம் மற்றும் சத்தியத்தை கடைபிடிப்பது
 • சுய முன்னேற்றத்திற்காகவும் வாழும் உலகின் மேம்பாட்டிற்காகவும் கடினமாக உழைப்பது

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

முஸ்லிம்கள் முக்கியமாக எதை நம்புகின்றனர்?

முஸ்லிம்களின் முக்கிய ஆறு நம்பிக்கைகளாவது:

 • இறைவனை நம்புவது
 • வானவர்களை நம்புவது
 • இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் / தூதர்கள் ஆகியோரை நம்புவது
 • தூதர்களுக்கு அனுப்பப்பட்ட புனித வேதங்களை நம்புவது
 • மக்கள் தம் செயல்களின் அடிப்படியில் பொறுப்பாளர்களாக்கப்பட்டு அதற்குத் தகுந்தாற் போல அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் நீதி நாளை நம்புவது
 • இறைவனின் தெய்வீகத் தன்மையையும் மற்றும் அவனால் அறியப்படாமல் எதுவும் நடவாது என்றும் நம்புவது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

இயேசுவைப் பற்றி முஸ்லிம்களின் கருத்தென்ன?

முஸ்லிம்களின் கூற்றுப்படி, எவ்வாறு ஆதம் பெற்றோரின்றி உண்டாக்கப்பட்டாரோ, அதே போல் இறைவனின் செயலால் கன்னி மேரி ஏசுவை பிரசவித்தார். திருக்குர்’ஆனில் ஏசு நிகழ்த்திய அற்புதங்கள் பலவற்றிற்கு அப்பாற்பட்டு, அவருடைய பிறப்பு, வியாதிகளை குணமாக்கும் அவருடைய சக்தி, மேலும் இன்ன பிற அற்புதங்கள் குறிக்கப்படுள்ளன. மேலும், மற்ற அற்புதங்களைத் தவிர இறைவனின் திரு வெளிப்பாடுகளைப் பெற்ற அவர், இருப்பினும் ஒரு மனித பிறவியாக இறைவனிடமிருந்து நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

குர்’ஆன் அரேபிய மொழியில் மட்டும் வாசிக்கப்படுகிறதா?

முஸ்லிம் மக்களில் 20% மட்டும் அரேபியர்களாக இருக்கும் உண்மையினால், அல்-குர்’ஆன், ஆங்கிலத்துடன் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் உலக முஸ்லிம் மக்களுக்கு தொழுகை (பிரார்த்தனை) சம்பிரதாய மொழியாக அரேபிய மொழியே இருப்பதினால், ஹிந்து மக்களால் தமது பூஜை மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், கிருஸ்துவர்களால் தமது பிரார்த்தனைகள் லத்தீன் மொழியிலும் உச்சரிக்கப் படுவதைப் போல அல்-குர்’ஆன் அதன் சொந்த மொழியான அரபிக் மொழியிலேயே ஓதப்படுகிறது. குர்’ஆனில் இடப்பட்ட கட்டளைகளை சரியாக புரிந்து கொள்ள அரேபியரல்லாத முஸ்லிம் மற்றும் மற்ற மதத்தவர் தத்தம் மொழிகளில் அல் குர்’ஆனின் மொழிபெயர்ப்பை வாசிக்கின்றனர்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

மும்முரமான மாணவர்களுக்கும், நிபுணர்களுக்கும் தினமும் ஐவேளை தொழுவதற்கு (வழிபடுவதற்கு) நேரம் கிடைக்கிறதா?

இது ஒரு தனிப்பட்டவருடைய தினசரி வேலைத் திட்டங்களைப் பொருத்தது. தொழுகைகள் ஒரு நாளின் பரவலான நேரங்களில் நடப்பதினால் அநேகமான முஸ்லிம் மக்கள் தம் பணியிடத்தில் வேலை நேரத்தில் ஐவேளையும் தொழவேண்டியதிருக்காது. ஒவ்வொரு வேளை தொழுகையையும் நிறைவேற்ற நீட்டிக்கப்பட்ட நேரம் இருப்பதினால் அவைகளுக்கு நேர எல்லைகளும் உண்டு. அந்த கால கட்டம் தொழிகையைப் பொருத்து, ஒன்று முதல் நான்கு மணி நேரமும் நீடிக்கப்படுகிறது. இந்த நேரங்கள் பிரதேசத்திற்கு பிரதேசம், மாறுபடும்.

வருடத்தில் பெரும்பாலும் மதிய தொழுகையின் நேரம் பள்ளிக்கூட நேரத்தைவிட நீண்டதாக இருப்பதனால், மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் அதை நிறைவேற்றலாம்.

போர்களத்திலும் தொழுகையை தவற விடவேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஒரு போர் வீரர் போரின் காரணத்தால் ஒரு வேளை தொழுகையை அதன் நேரம் முடிவதற்குள் தொழாமல் தவற விட்டிருந்தால், அதை அவர் அடுத்த தொழுகையின் நேரத்தில், போர் நடந்து கொண்டிருந்தாலும் கூட, விட்டுப்போன தொழுகையையும் சேர்த்து தொழவேண்டும்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

கா’பாஹ் என்றால் என்ன?

மக்காஹ் மாநகரத்தில் அமைந்திருக்கும் வெல்வெட் துணியால் போர்த்தப்பட்ட ஒரு கன சதுரம், இறைவனின் பிரார்த்தனைகளுக்கான முதல் வீடாக முஸ்லிம்களால் நம்பப்படும் ஒரு கட்டிடம். ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் முஸ்லிம்கள் தம்மை கா’பாஹ் வை நோக்கி ஒருமுகப்படுத்திக் கொள்கின்றனர். இந்த தொழும் திசை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. உலகில் ஒரு புறமுள்ள மக்கள் கா’பாஹ் அமைந்திருக்கும் திசையான கிழக்கை நோக்கியும், மறு புறமுள்ளவர், மேற்கை நோக்கியும் தொழுவர்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஒரு முஸ்லிமை சொர்கத்திற்கோ / நரகத்திற்கோ அனுப்ப இறைவன் யாதொரு கோட்பாடை அல்லது தேர்வு அளவை அமைத்திருக்கின்றானா?

இறைவன் அறிந்திருக்கும் ஒரு சாதாரண நபருடைய செயல்பாடுகள், எண்ணங்கள், சூழ்நிலைகள் வரையறுப்புகள் அவரிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் அவைகள் இறைவனால் அறியப்பட்டவைகள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் இந்த பூமியின் மீது செய்த ஒட்டுமொத்த காரியங்கள் மற்றும் கொண்டிருந்த நம்பிக்கைகள் ஆகியவைகளைப் பொருத்து நீதி வழங்கப்படுவார். அல்-குர்’ஆனில் இறைவனுடைய 99 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன., அதில் அநேககான பெயர்களின் அர்த்தம் “நீதிபதி” மற்றும் “நேர்மையானவன்” என்ற பொருள் படும்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

அவன் / அவள் இறைவனின் மீது நம்பிக்கையின்றி இருந்து வாழ்நாள் முழுவதும் நல்லவராக இருந்தும் ஒருவர் / ஒருவள் நரகம் செல்வாரா?

வாழ்நாளில் ஒருவருடைய புண்ணிய பண்புகளுக்கேற்ப அவருக்கு சன்மானங்கள் வழங்கப்படும். மேலும் சந்தேகமின்றி இறைவன் ஒவ்வொரு உயிரின் உள் இரகசியங்களை அறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே, அவன் மிகவும் நீதி நேர்மையுடன் தீர்ப்பளிப்பான்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

இறைவனுக்கு அனைத்தும் முன்கூட்டியே தெரியும் என்று இஸ்லாம் சொல்லும் பொழுது, அவன் ஒவ்வொருவரையும் ஏன் நேராக சொர்கத்தில் / நரகத்தில் இடவில்லை?

வானவர்கள் மற்றும் பிராணிகளைப் போல் அல்லாமல் மானிடர்கள்

நல்ல மற்றும் தீய செயல்களை தேர்ந்தெடுக்க வல்லவர்கள் என்பதே முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். அவர்கள் அறியாமலேயே, ஒவ்வொருவருடைய இறுதி இருப்பிடத்தை இறைவன் அறிவான். ஆகவே, ஒரு பாவத்தி செய்வதா இல்லையா என்பது ஒருவருடைய சுய-தீர்ப்பாகும், ஆனால் நிச்சயமாக நீதி நாளன்று அதற்கு அவர்களே பொறுப்பாளியாவர்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

மற்ற மதங்களின் மீது இஸ்லாம் உடைய நிலைப்பாடென்ன?

இதர மதங்களை மதிப்பதே இஸ்லாம் உடைய அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். இந்த பன்முகத் தன்மை தெய்வீக திட்டத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், உலக மக்களின் இரட்சிப்பு இறைவனிடம் மட்டுமே உள்ளது, முஸ்லிம்களையும் சேர்த்து.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

முஸ்லிம் அல்லாதோரைப் பற்றிய குர்’ஆனின் அறிக்கை என்ன ?

ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தையே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பதை அல்-குர்’ஆன் வெளிப்படையாக அறிவிக்கிறது. உண்மையில், வெறுப்பு, ஆதிக்கம், பலவந்தமாக எந்த ஒரு நடவடிக்கையையும் சுமத்துவது ஆகியவைகளை அல்-குர்’ஆன் தடை செய்கிறது. மேலும் மதப் பன்மைவாதம் என்பது மக்களை சோதிப்பதற்கான சர்வ வல்லமை படைத்தவனின் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. முஸ்லிம் அல்லதோரின் வழிபாட்டு ஸ்தலங்கள் உலகம் முழுக்க பரவியிருப்பது முஸ்லிம் சமுதாயங்கள் எந்த வகையிலும் இதர மத சமூகத்தாரை எதிர்க்கவில்லை என்பதையே காட்டுகிறது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஸுன்னி மற்றும் ஷியாக்களுக்கு இடையே உண்டான முக்கிய வேறுபாடுகள் என்ன?

இரு தரப்பினருக்கும் இடையிலான அடிப்படை நம்பிக்கை ஒன்றுதான், அதாவது இறைவன் ஒருவனே, தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உடைய தீர்க்கதரிசித்துவம், மற்றும் இஸ்லாமின் ஐந்து தூண்கள் போன்ற கோட்பாடுகள்.

அவர்களை பிரித்தாளுவது அறிவின் மூலக் கூற்று மற்றும் தலைமை தாங்கிய அரசியல் அமைப்பு. தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உடைய மறைவிற்குப் பின்னர் அடுத்து யார் தலைமை தாங்குவது என்பது தான் உண்மையில் ஒரு பிரச்சினையாக எழுப்பப்பட்டது. தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உடைய குடும்பத்தார், குறிப்பாக அவர் வம்சத்தினர் தான் தலைமை தாங்கை நடத்த வேண்டும் என்று ஷியாக்கள் நம்பினர். அதே சமயம் ஸுன்னிக்கள் மாறுபட்ட அதாவது அடுத்து ஆளப்போகிற ஒரு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் முஸ்லிம்களுக்கு உண்டு என்ற கருத்தை கொண்டிருந்தினர்.

தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்கு வாரிசாக தனது மருமகனை நியமித்ததாக ஷியாக்களின் கூற்றாக இருந்தது, அது உண்மையாகாது. மேலும் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு குறிப்பிட்ட நபரை அவருடைய ஆன்மீக மற்றும் அரசியல் தலைவராக யாரையும் நியமிக்கவில்லை.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் (அதாவது தனது தலை முடியை மறைத்தல்) அணிய வேண்டுமா?

சரியான பதில் ஒரு பெண் யாருடன் பேசுகிறாள் என்பதைப் பொருத்து இருக்கிறது.

ஒரு மூன்றாம் நபருக்கு (ஒரு ஆண்) முன்னிலையில் இரத்த உறவு அல்லது சொந்தம் கொண்டவரைத் தவிர மற்றவர் முன்னிலையில் தனது உடலை மூடி மறைக்கவேண்டும் என்பது முஸ்லிம் பெண்களுக்கான ஒரு உத்தரவு இது. அதுவும் பொது இடங்களில், அவள் தன்னை அடையாளம் காட்ட வேண்டியிருந்தால் தன் முகத்தைக் காட்ட அனுமதியுண்டு.

அனேக இஸ்லாமிய நாடுகளில் ஹிஜாப் பலதரப்பட்ட காரணங்களுக்காக உடுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு அடையாளமாக, தன் நம்பிக்கையின் மீது பக்தி, உடல் தோற்றத்தைப் பார்த்து தீர்மானிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, ஹிஜாப் கடைபிடிக்கப்படுகிறது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

இஸ்லாம் மதத்தில் பாலின பாகுபாடு யாதும் உள்ளதா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமத்துவத்தைப் பெற அமெரிக்காவிலும், உலகின் மற்ற பல பகுதிகளிலும் சட்ட ரீதியாக முஸ்லிம்கள் போராடினர். அமெரிக்காவின் முஸ்லிம் சமுதாய பெண்கள் குறிப்பாக பல்வேறு உத்தியோகப் பதவிகள் மற்றும் தலைகைகள் பெற்றுள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட நாடுகளில் பெண்கள் மருத்துவராகவும், தொழிலதிபர்களாகவும், பொறியாளர்க்ளாகவும், மேலும் சில சமயங்களில், நாட்டுக்காகவும் சேவைப் புரிகின்றனர்.

உலகம் முழுக்க தமது கருத்துக்களை வழங்குவதற்கு பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையே இது வெளிப்படையாக காட்டுகிறது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

பெண்களின் உரிமையைப் பற்றி குர்’ஆன் என்ன சொல்கிறது?

ஒவ்வொரு தனிப்பட்ட சமுதாயத்திலும் அதன் கலாச்சாரத்திலும் அல்-குர்’ஆன் விளக்கப்பட்ட விதத்தை இதன் பதில் சார்ந்துள்ளது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

முஸ்லிம் பெண்கள் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டுமா அல்லது அவர்கள் வெளியில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனரா?

இந்த சூழ்நிலை மதத்தின் அடிப்படை இல்லாமல் முற்றிலும் குடும்ப கலாச்சாரம் மற்றும் அதன் சூழலைப் பொருத்தது. இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி அல்-குர்’ஆனோ அல்லது எந்த ஹதீஸோ பெண்கள் வேலை செய்வதை தடுக்கவில்லை. உலகம் முழுக்க முஸ்லிம் பெண்கள் வீட்டிற்கு வெளியே ஆண் ஆதிக்கமுள்ள தளங்களான மருத்துவம் மற்றும் பொறியியலில் பணிபுரிகின்றனர்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

வீட்டு வன்முறையின் மீது இஸ்லாம் உடைய கருத்தென்ன?

வீட்டு வன்முறையில் ஈடுபடுவது மற்றும் திருமண துஷ்பிரயோகம் அதாவது தம்பதி / மனைவியை இழிவு படுத்துவது ஆகியவை மனிதாபிமான மற்ற செயலாகவும் அது மனிதர்களை மதிக்கும் இஸ்லாமிய கொள்கையை மீறுவதாகும். ஆகவே, இது எந்த விதத்திலும் அனுமதிக்கப்படவில்லை. திருமண துஷ்பிரயோகம் என்ற ஒரே ஒரு காரணமே மனைவி விவாகரத்தை நாடுவதற்கு போதுமானதாகும். தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வரலாறு அவ்வாறான எந்த வித நடவடிக்கையும் அவரிடமிருந்து தொடங்கியதாக காட்டவில்லை. மாறாக அவ்வாறு நடந்து கொண்டவர்களை அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

பெண்களுடைய கல்வியுரிமையை வரையறுக்க எதாவது ஆதாரம் உள்ளதா?

அல்-குர்’ஆனின் ஒரு புகழ்பெற்ற கூற்று உண்டு, “அறிவை நாடவும்” என்று. அது முஸ்லிம் பெண்களை உலகத்தின் எந்த மூலைக்கும் சென்று கல்வி பயின்று அறிஞர்களாகவும், எழுத்தாளர் மற்றும் ஆசிரியையாகவும் பணிக்கிறது. கல்வியை நாடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சட்டரீதியாக்கப்பட்டது. உண்மையில், அல்-குர்’ஆனின் முதல் வார்த்தையின் திரு வெளிப்பாடு “படி” என்பதாக இருந்தது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு பொது கட்டளையாகும்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

மற்ற மதத்தினரை மணக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப் படுகின்றனரா?

பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, முஸ்லிம் ஆண்கள் கிருஸ்துவ அல்லது யூத பெண்ணை மணமுடித்துக் கொள்ளலாம். அவ்வாறாகும் பொழுது முஸ்லிம் கணவன் அந்த கிறுஸ்துவ/யூத மனைவியை தனது மதத்தின் மீதுள்ள விசுவாசத்தைப்போல வழிபட அனுமதிக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு முஸ்லிம் அல்லாத ஆணை ஒரு முஸ்லிம் பெண் மணக்கலாகாது ஏனெனில் முஸ்லிம் ஆண்கள் அவர் மனைவிக்கு வழிபாட்டின் உரிமையை வழங்குவதைப்போல, முஸ்லிம் அல்லாத ஆண் அவளுடைய மதத்தை மதிக்க கடமைப்பட்டவராக இருக்க மாட்டார்.

ஆண்தான் ஒரு குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் என்ற உண்மையின் அடிப்படையில் இந்த கருத்து நிலவுஅதே சமயம், ஒரு முஸ்லிம் அல்லாத ஆணை ஒரு முஸ்லிம் பெண் மணக்கலாகாது ஏனெனில் முஸ்லிம் ஆண்கள் அவர் மனைவிக்கு வழிபாட்டின் உரிமையை வழங்குவதைப்போல, முஸ்லிம் அல்லாத ஆண் அவளுடைய மதத்தை மதிக்க கடமைப்பட்டவராக இருக்க மாட்டார்.வதால், இம்மதிரியான திருமணங்கள் சமகால முஸ்லிம்களால் தடைசெய்யப்படுகின்றன.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

பெண்கள் ஒரு கணவரை விட அதிகமாக மணக்க அனுமதிக்கப் படுகின்றனரா?

குழந்தைகளுடன் இருக்கும் விதவைப்பெண்கள் மற்றும் அனாதைகளை பரிபாலிக்கும் உண்மையான நோக்கத்துடன் தான் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கு பொருந்தாமல் இருப்பதுடன் பல கணவர்களை மணப்பதால் எந்த நோக்கமும் நிறைவேறாது, ஆகவே அது அனுமதிக்கப்படவில்லை.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

விவாகரத்திற்கு இஸ்லாமின் கண்ணோட்டமென்ன?

ஒரு ஹதீஸின் படி, விவாகரத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஆனால் மிகவும் வெறுக்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. ஏனெனில் இதனால் ஒரு குடும்பம் பிரியும் வாய்ப்பு உண்டு. இருப்பினும், அல்-குர்’ஆன் விவாகரத்தை அனுமதிக்கும் பொழுது அதற்கு பல நிலைகளை பரிந்துரைத்து விளக்கியுள்ளது. முதலில் சம்பந்தப்பட்ட தம்பதிகள் ஆலோசனை மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றில் ஈடுபடுமாறு வலியுறுத்தப் படுகின்றனர். இந்த முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, விவாகரத்து இறுதி விருப்பமாக இருக்கலாம். மேலும் இது பல சூழ்நிலைகளுக்கு ஒரே தீர்வாக மட்டும் இருக்கலாம்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

இஸ்லாம் நவீனத்துவத்தை எதிர்க்கிறதா?

இது முற்றிலும் கேள்வி கேட்கும் சமுதாயத்தைப் பொருத்தது. யாதொரு வகையில் நவீனம் என்பது ஜனநாயகம் மற்றும் சிந்திக்கும் உரிமை, மதம் மற்றும் மனசாட்சியின் வெளிப்பாடு ஆகியவைகளுடன் சம்பந்தப்பட்டிருந்தால் இஸ்லாமிய கருத்து மாறுபடலாம்.

சில முஸ்லிம்கள் மதத்தின் கொள்கைகளில் நவீனத்தை இரண்டாம்பட்ச பிரச்சினையாகவும், வேறு சிலர் இதுவே அடிப்படை கொள்கையாகவும் கணிக்கின்றனர். பல முஸ்லிம்களால் 2013-ல் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய கருத்துக் கணிப்பில் அவர்கள் நவீனத்தை ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரமாக தமது வாக்குகளை அளித்துள்ளனர்.

இத்தனை உண்மைகளுக்கும் அப்பாற்பட்டு, நவீனத்துவம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பொருளாதார வளர்ச்சிக்கும் குறுகியகால ஆதாயத்திற்கும் இடையிலான காரணிகளால் கவரப்பட்டு நமது சூழலில் மற்றும் உலகில் ஏற்படும் பேரழிவு விளைவுகளைப்பற்றி மற்ற மதத்தினரைப்போலவே முஸ்லிம் மக்களும் கவலைப்படுகின்றனர்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஜனநாயகத்திப் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?

ஒரு தனிப்பட்டவருடைய கண்ணியம் மற்றும் கொள்கைகளுடன் முரண்படாதவரை சமுதாயத்தின் ஒவ்வொருவரையும் ஒன்றாக கூட்டி அவர்களை வாக்களிக்க அனுமதிப்பதே இஸ்லாமிய ஜனநாயகம் ஆகும்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

இஸ்லாம் மனித உரிமைகளை ஊக்குவிக்கிறதா?

முதலில், தூதர் முஹம்மத் (தூதர்களில் இறுதியானவர், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் அரேபியர்களுக்குள்ளே இருந்த சமூக மற்றும் ஆன்மீக பிரச்சினைகளை நீக்குவதாக இருந்தது. மதப் பின்பற்றலில் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது. சமூகத்தில் பெண்கள் சரிசமமாக நடத்தப்பட்டனர். இன பாகுபாடு முற்றிலும் களையெடுக்கப்பட்டது. மதுபானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் காரன் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் “ரெலிஜஸ் கம்பேரிஸன்” (மத ஒப்பீடு) என்ற தனது புத்தகத்தில் “முஹம்மத் (ஸல்) ஒரு திகைப்பூட்டும் வெற்றியை அரசியல் ரீதியாக, ஆன்மீக ரீதியாகவும் சமூகத்தை வலுப்படுத்தும் ஒரு அதிவேக வளர்ச்சியை கண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஷரியாஹ் என்றால் என்ன?

ஷரியாஹ் என்ற வார்த்தை “நீருக்கான வழி” என்ற அரேபிய மொழியின் சொற்தொடர் அடிப்படையிலிருந்து பெறப்பட்டதாகும். ஷரியாஹ் என்பது இறைவனுடைய படைப்புகளின்பால் அமைதியான அணுகலுக்கும் மனித குலத்தின் நலனுக்கும் ஒருவரை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்ல அல்-குர்’ஆன் மற்றும் ஸுன்னாஹ் (தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய போதனைகள்) ஆகிய இரண்டின் வழிகாட்டல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

வாழ்வின் பல வேறுபட்ட சூழ்நிலைகளில் நடத்தைக் கோட்பாடு மற்றும் சமயக் கட்டளைகள் மூலம் அறநெறிக்குத் தேவையான வழிகாட்டுதல்களை ஷரியாஹ் வழங்குகிறது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஃபத்வா என்றால் என்ன? 

எந்த ஒரு மதத்திலும் ஒரு விஷயத்தை பின்பற்றலாமா அல்லது வேண்டாமா என்ற சிக்கல்கள் அல்லது பிரச்சினைகள் தோன்றுவதுண்டு. அப்பேற்பட்ட சூழ்நிலைகளில் ஆன்மீக அறிஞர்கள் வழிகாட்ட இருப்பர். அதே போல் அங்கீகரிக்கப்பட்ட (அதிகாரம் கோரும்) இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழிகாட்டுவர். அவ்வாறு வழங்கப்படும் அறிஞர்களின் கருத்து “ஃபத்வா” என்று அறியப்படுகிறது. இந்த புதிய கருத்துக்களின் தோன்றல்கள் ஒருவரை கட்டுப்படுத்தாததால், அதைப் பின்பற்றுவது முஸ்லிம்களைப் பொருத்தது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

கொடுக்கப்படும் தண்டனைகளைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

குற்றவாளியின் கையை வெட்டுவது, கற்கள் எறிவது மற்றும் மரண தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபிய பழங்குடி சமுதாயத்தின் இடையே நடைமுறை பழக்கத்தில் இருந்தது. அவைகளை நிறைவேற்ற நிபந்தனைகளும் மிகக் கடுமையானவையே. உதாரணத்திற்கு விபச்சாரம் கண்ணால் நேரில் கண்ட நான்கு சாட்சிகளின் அடிப்படையில்தான் தண்டனைக்குட்பட்டது.

இன்றைய நிலையில் அநேக முஸ்லிம் நாடுகள் இப்பழக்கத்தை கடைபிடிக்கவில்லை. மேலும் தடுக்கப்பட்ட சில சமுதாய மக்களே இதைப் பின்பற்றுகின்றனர்.   தண்டனைக்குரிய நிபந்தனைகளை சந்திக்க இயலாது என்பதால், ஒரு குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதற்காக, சூழ்நிலை ஆதாரங்கள் சேகரிக்கப்படுவதை அறிஞர்கள் கண்டனம் செய்துள்ளனர்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

கௌரவக் கொலை இஸ்லாம் மதத்தில் அனுமதிக்கப்பட்டதா?

இது இஸ்லாம் மதத்தில் தடுக்கப்பட்ட ஒரு வித வன்முறைச் செயலாகும். இத்தகைய கொடூரமான நடவடிக்கைகள் பொதுவாக தமது சொந்த குடுபத்திலுள்ள யுவதிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அவர்கள் குடும்பத்தை அவமானத்திற்குள்ளாக்கியதாக கூறி குடும்ப உறுப்பினர்களே இக்காரியத்தில் ஈடுபடுவதுண்டு. ஒரு பெண்ணுக்கு எதிராக சரியான சாட்சிகளின்றி கெட்டதை பேசுவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

குண்டு வெடிப்பதிலும், பயங்கர வாதத்திலும் முஸ்லிம்கள் தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றனரா?

தற்கொலை குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாதம் இஸ்லாமிய கொள்கைகளை கடுமையாக மீறுகின்றன மற்றும் எதிரானவையாக உள்ளன. இதை மிகவும் பெரிய பாவச்செயல்களில் ஒன்றாக இஸ்லாம் கருதுகிறது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

தீவிர வாதிகள் தமது நடவடிக்கைகளை குர்’ஆனின் கூற்றாக கூறி நியாயப்படுத்துவது எப்படி ?

சுய-ஊக்குவிப்பு மற்றும் சொல்லப்படாத வழிமுறைகளை பேசுவது இஸ்லாமில் அனுமதி இல்லை. மற்ற மதத்தினர் வழிகாட்டலை அவர்களுடைய வேதங்களின் மூலம் பெறுவதைப் போலவே முஸ்லிம்களும் தகவல்களுக்கு அல்-குர்’ஆனையே நாடுகின்றனர்.

அநேக பயங்கரவாத நடவடிக்கைகள் போரின் நோக்கமாக இஸ்லாம் மீது சாற்றப்படுகின்றன. அனேக சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இச்லாமிய அறிஞர்கள் தமது கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர். இருப்பினும், சில தீவிரவாதிகள் பாரம்பரிய அறிஞர்களாக தம்மை முன்நிறுத்தி அனுமதிக்கப்படாத மற்றும் தடை செய்யப்பட்ட விதிகளை ஊக்குவிக்கின்றனர்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

இஸ்லாம் அப்பாவி குடிமக்களை கொலை செய்வதை நியாயப்படுத்துகிறதா?

உலக முஸ்லிம் அறிஞர்களால் குறிக்கப்பட்டது போல் அப்பாவி குடிமக்களை கொல்லுவது நிச்சயமாக அல்-குர்’ஆனின் போதனைகளுக்கு எதிரானதாகும்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஏன் முஸ்லிம்கள் பயங்கர வாதத்தை கண்டிப்பதில்லை?

இந்த கேள்வி மற்றொறு கேள்வியை தூண்டிவிடுகிறது – கிருஸ்துவர்கள் அல்லது யூதர்கள் அவர்களின் பெயரில் சிலரால் தொடுக்கப்பட்ட பயங்கரவாதத்தை ஏன் கண்டிப்பதில்லை?

இஸ்லாம் உடைய பெயரில் ஒரு செயல் தொடக்கப்பட்டால் அதை அவர்கள் உறுதி செய்யாதவரையில் முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த விதமான தரவு ஒரு தலைப்பட்சமானது மற்றும் பிரயோஜனமற்றது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

நிறைய பயங்கரவாதிகள் இருப்பதற்குப் பின்னால் என்ன காரணம்?

இந்த கேள்விக்குப் பின்னாலுள்ள உண்மையான காரணம் என்னவென்றால், மக்கள் கண்ணோட்டத்தில் குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்வதற்கு உகந்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படுகின்றனர். தவறுதலாக சிலர் வன்முறை என்ற விசேஷ நடவடிக்கையை முஸ்லிம்கள் பின்பற்றுவதாக அனுமானித்துக்கொள்வது ஒரு மோசமான கருத்தாகும். இவை ஒரு சில காரணங்களாகும்.

மேலும் முஸ்லிம்களுடைய ஜனத்தொகையை ஒப்பிட்டுப் பார்த்தோமானால், மக்கள் மனதில் பயங்கரவாதியாக அல்லது தீவிரவாதியாக தோன்றி பழிக்கப்பட்ட முஸ்லிம்களின் விழக்காடு மிகக் குறைந்ததாகும்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாத் என்பதற்கு சரியான அர்த்தம் “கடுமையாக பாடுபடுவது” என்பதாகும். அது “புனிதப் போர்” என்று மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதிகாரமுள்ள முஸ்லிம் ஆதாரங்கள் இதை பெரிய ஜிஹாத் என்றும், சிறிய ஜிஹாத் என்றும் தரம் பிரித்துள்ளனர். பெரிய ஜிஹாத் உள்ளார நடக்கும் எதிர்வினை நினைப்புகள் மற்றும் அதன் விளைவால் உண்டாகும் செயல்களை கட்டுப்படுத்துவதாகம். அதே சமயம், சிறிய ஜிஹாத் என்பது தற்காப்பினால் நியாயத்தை நிலை நாட்ட வெளிப் புறத்தில் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளாகும்.

மேற் குறிப்பிட்ட இரண்டு அறிக்கைகளிலிருந்து ஜிஹாத் என்பது சத்தியம் உண்மையில் ஆபத்தான நிலையிலிருக்கும் பொழுது எடுத்துக்கொள்ளப்படும் தற்காப்பு நடவடிக்கைகளாகும்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

மேற் குறிப்பிட்ட இரண்டு அறிக்கைகளிலிருந்து ஜிஹாத் என்பது சத்தியம் உண்மையில் ஆபத்தான நிலையிலிருக்கும் பொழுது எடுத்துக்கொள்ளப்படும் தற்காப்பு நடவடிக்கைகளாகும்.

கேட்கப்பட்ட கேள்விக்கு இரண்டு தோற்றங்கள் உண்டு – ஒன்று மற்ற மதங்களை பின்பற்றுவோருடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களிடையே பெருமளவில் மோதல்கள் ஏற்படுகின்றன – இரண்டாவது முஸ்லிம்கள் ஆட்சிபுரியும் பிராந்தியங்களில் நிறைய மோதல்கள் உள்ளன.

இந்த இரண்டு தோற்றங்களில் முதலாவது தப்பானதாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் 50% நாடுகளின் பெரும் பகுதிகள் சாந்தியுடன் இருக்கின்றன. சொல்லப்போனால் அநேக நேரங்களில் மற்ற பிராந்தியங்கள் மோதலில் இருக்கின்றன, இது அமெரிக்காவைச் சேர்த்து, உதாரணத்திற்கு. ஒரு மேற்கோள் காடுவதற்காக, இரண்டு பெரிய உலகப் போர்கள் கிறுஸ்துவர் வசிக்கும் நாடுகளுக்கிடையேதான் ஏற்பட்டன.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

மதுபானங்கள் அருந்த ஏன் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை?

இந்த கேள்விக்கான பதில் மிக சுலபமானது. ஒரே காரணம் அல்-குர்’ஆன் அதை தடை செய்கிறது என்பதே. ஏனெனில் மது அருந்துபவருக்கு அது பயனளிப்பதை விட கேடுதான் பெருமளவில் விளைவிக்கிறது.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஹலால் என்றால் என்ன?

ஹலால் என்படு ஒரு அரபிக் வார்த்தை, அதன் நேர் அர்த்தம் “அனுமதிக்கப்பட்டது” என்பதாகும். அதன் எதிர்வினை “ஹராம்” அதாவது “தடுக்கப்பட்டது” இஸ்லாமிய சட்டப்படி தடை செய்யப்பட்டது என்பதாகும். இந்த வார்த்தை உணவு வழங்கும் ஹோட்டல்களின் மற்றும் உணவகங்களின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அதாவது தயாரிக்கப்பட்ட உணவு அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய முறைப்படி தயாரிக்கப்பட்டது அன்று அர்த்தம். அதாவது உணவுக்காக அனுகதிக்கப்பட்ட பிராணிகள் / பறவைகள் வெட்டப்படும் முன்னர் இறைவனுடைய பெயர் உச்சரிக்கப்பட்டது என்று பொருள்.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்

இஸ்லாமிய பொருளதாரம் / வங்கிமுறை எவ்வாறு நடைபெறுகிறது?

இஸ்லாமிய பொருளாதர நிபுணர்களின்படி. பணம் சம்பாதிக்கப்பட வேண்டும். ஆகவே, சில விதமான சம்பாதனைகளான சூதாட்டம் மற்றும் வட்டிக்கு கடன் வழங்குதல் ஆகியவை கடினமாக தடை செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், முதலீடு செய்வது இஸ்லாமில் ஊக்குவிக்கப்படுகிறது. அது முதலீடு செய்பவருக்கு பெரும் ஆபத்தை அடக்கியுள்ளதுடன் ஒரு குறிப்பிட்ட விழக்காடு இலாபமும் கொண்டுள்ளது. இது சமுதாயத்தில் ஆரோக்கியமாக செல்வம் புரள வழி வகுக்கிறது.

சமீபகால பொருளாதார சரிவின் போது, வட்டி நிறைந்த நிதி நிலையில் செயல்படாததால், இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பாதிப்புக்குள் ஆகவில்லை.

அதிக விவரங்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்ளவும்